Breaking News

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின்(NSE) பணிப்பாளர் கே.சதுர மிஹிதும் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களை நேற்று(18.08.2025) சந்தித்து கலந்துரையாடினார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின்

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின்(NSE) பணிப்பாளர் கே.சதுர மிஹிதும் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களை நேற்று(18.08.2025) சந்தித்து கலந்துரையாடினார்.



கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாயத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், முதியோர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் முதியோருக்கான கொடுப்பனவினை பெற்றுக் கொள்வதிலுள்ள இடர்பாடுகள், முதியோருக்கான கொடுப்பனவில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள், வெளிமாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துக்கூறினார்.


தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் முதியோர் தேசிய செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பட்டு உத்தியோகத்தர்களுடன் 2023, 2024ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது.


கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் முதியோர் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே.சதுர மிஹிதும் , கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, முதியோர் தேசிய செயலகத்தின் தலைமைப்பீட உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்