Breaking News

செம்பியன்பற்று தெற்கு செம்பியன் முன்பள்ளியில் சிறுவர் சந்தை


செம்பியன்பற்று தெற்கு செம்பியன் முன்பள்ளியில் சிறுவர் சந்தை



வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு செம்பியன் முன்பள்ளியில் இன்று (4) சிறார்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இடம்பெற்றது


முன்பள்ளி ஆசிரியர் டி.சுஜானா தலைமையில் இன்று காலை 09.00 மணியளவில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு முன்பள்ளி சிறார்களால் சந்தை நிகழ்வு நாடா வெட்டி திறக்கப்பட்டது


முன்பள்ளிச் சிறார்களிடம் மறைந்து கிடக்கும் உள்ளார்ந்த திறன்களை வெளிக் கொண்டு வரும் நோக்கில் இந்தச் சிறுவர் சந்தை நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.


சிறுவர் சந்தை நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் சிறுவர் சந்தை சிறப்பாக இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது


இந்நிகழ்வில் முன்பள்ளிகளின் மருதங்கேணி கோட்ட இணைப்பாளர் S.ஜெயந்தா

முன்பள்ளி முகாமைத்துவ குழு தலைவர் R.உஷா, முன்பள்ளி ஆசிரியர் 

டி.சுஜானா மற்றும் பெற்றோர்கள்,அயல் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்