Breaking News

திடிரென தாழிறங்கிய வீதி, குடைசாய்ந்த அரிசி லொறி #சம்மாந்துறை நெய்னாகாடு திராவோடை வீதியில் சம்பவம்

 திடிரென தாழிறங்கிய வீதி, குடைசாய்ந்த அரிசி லொறி #சம்மாந்துறை நெய்னாகாடு திராவோடை வீதியில் சம்பவம்



நேற்றைய தினம் 2025/08/02 இரவு 7 மணி அளவில் சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்திலிருந்து இரத்தினபுரியை நோக்கி அரிசி ஏற்றி சென்ற கனரக வாகனம் சற்று முன்னர் நெய்னாகாடு பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள திராவோடை வீதியில் பாதை சேதம் காரணமாக வாகனம் முழுவதுமாக குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.


இதன் போது லொறியை செலுத்திய சாரதி எந்த ஆபத்துகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளார். இந்த வாகனத்தில் சாரதி மட்டுமே பயணித்துள்ளார். லொறி பூராகவும் அரிசி மூடைகள் நிரப்பப்பட்டு பயணித்தது குறிப்பிடத்தக்கது.