Breaking News

மிக சிறப்பாக ஆரம்பமானது வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுக்கள்.....!


மிக சிறப்பாக ஆரம்பமானது வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுக்கள்.....!



இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு இளைஞர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான குழு விளையாட்டுகள் வலிகண்டி வெண்மதி விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணி அளவில் பிரதேச இளைஞர் உத்தியோகத்தர் மயூரன் மற்றும் பிரதேச இளைஞர் சம்மேளனத்தலைவர் நிதர்சன் தலைமையில் ஆரம்பமானது 


இவ் குழு விளையாட்டுகளாக இன்றைய தினம் ஆண் பெண்களுக்கான கபடி மற்றும் கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றதுடன் இவ் குழு விளையாட்டுக்களில் இருந்து சிறப்பாக விளையாடிய வீரர்கள் வீராங்கனைகள் பிரதேச இளைஞர் அணிகளுக்காகவும் தெரிவு செய்யப்பட்டனர் 



இவ் விளையாட்டுக்களை பார்வையிடுவதற்காக வடமராட்சி கிழக்கு முழுவதும் இருந்து சிறுவர்கள் பெரியவர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்