Breaking News

மிகப் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்ட ஆழியவளை கரப்பந்தாட்ட மைதானம்....!

மிகப் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்ட ஆழியவளை கரப்பந்தாட்ட மைதானம்....!



யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்தினர் கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா இன்றைய தினம் (24) மாலை 6 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது 


இவ் நிகழ்வானது விநாயகமூர்த்தி நினைவாக திரு திருமதி ஆனந்த ராசா ஜெயந்தா அவர்களின் பூரண நிதிப் பங்களிப்பில் மிகப்பிரமாண்டமாக இடம் பெற்றது 


இவ் நிகழ்வின் அதிதிகளாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் யுகதீஸ் மற்றும் ஆழியவளை கிராம உத்தியோகத்தர் திருமதி சரிதாஸ் ராதிகா அவர்களும் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரதாத் மற்றும் ஆழியவளை கிராமத்தில் இருக்கும் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நிதிப் பங்களிப்பாளர்களின் உறவினர்கள் என்போர் கலந்து கொண்டனர் 


வருடம் தோறும் ஆழியவளை அருணோதய விளையாட்டு கழகம் நடத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்று போட்டியின் இந்த வருடத்திற்கான சுற்று போட்டியும் இன்றய தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது 


இவ் நிகழ்வில் இளைஞர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என வடமராட்சி கிழக்கில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.