Breaking News

சட்டவிரோத திஸ் விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

 

சட்டவிரோத திஸ் விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!



யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதுடன் நாளைவரை முன்னெடுக்கப்படவுள்ளது.


சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


குறித்த போராட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்

ளனர்.