சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இசை அரங்கமும் உதவியும்..!
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இசை அரங்கமும் உதவியும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம
முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. இசைக்கலைமணி இசை ஆசிரியர் திருமதி பங்கயச்செல்வி முகுந்தன் அவர்களின் பண்ணிசை இடம் பெற்றது. இதில்
இதில் ஹார்மோனியம் இசையினை இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும்,
மிருதங்க இசையினை முதுகலைமானி ஞானவேல் வசந் அவர்களும்,
தபேலா இசையினை கலாவித்தகர் த வே.பிரபாகரசர்மா ஆகியோரும் வழங்கினர்.
இதேவேளை சங்கானை பிரதேச வைத்தியசாலை சமூகத்தினரால் சங்கானை வைத்தியசாலை பணிப்பாளர் தலமையில் சங்கானை பிரதேச வைத்திய சாலையின் நலன்புரி சங்கத்தினர் இணைந்து சந்நிதியானஹ ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் ஆற்றிய அறப்பணிகளுக்காக பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை கடந்த 09/08/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவனை பிரிவில் அமைந்துள்ள ஶ்ரீ வேல்முருகன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக
ஆலய கட்டுமானப் பணிக்காக நிர்வாகத்தினரிடம் ரூபா 150,000 நிதி வழங்கிவைக்கப்பட்டது.
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் ஆச்சிரம தொண்டர்கள் சகிதம் நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.