மாபெரும் கரப்பந்தாட்ட கிண்ணத்தை தமதாக்கிய மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர்....!
மாபெரும் கரப்பந்தாட்ட கிண்ணத்தை தமதாக்கிய மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர்....!
மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் நடத்தும் மாபெரும் கரப்பந்தாட்ட தொடரானது நேற்றைய தினம் (3) பிற்பகல் 2 மணியளவில் மாமுனை கலைமகள் கரப்பந்தாட்ட மைதானத்தில் வினோத் குடும்பத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது
இவ் சுற்றுப்போட்டில் பல பெண்கள் அணிகள் தமது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்திஇருந்தனர்
பலத்த போட்டியின் மத்தியில் இடம் பெற்ற இவ் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினரை எதிர்த்து செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் மோதினர்
இவ் இறுதி போட்டியில் 14:25 முதல் சுற்றில் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் முன்னிலை வகித்தனர் பின் பலத்த எதிர்பார்ப்புடன் அடுத்த சுற்றானதும் இடம்பெற்றது இவ் சுற்றிலும் 18:25 எனும் புள்ளிகளின் அடிப்படையில் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் முன்னிடம் வகித்து வெற்றியை தமதாக்கி கொண்டனர்
இவ் சுற்றுப்போட்டியியை பார்வையிடுவதற்கு வடமராட்சி கிழக்கில் இருந்து பல இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்