Breaking News

இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய!

 இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய!



சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன், கௌரவ சனாதிபதி அநுரகுமார திசாநாயக அவர்களால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அதற்கமைய, 14 ஆகஸ்ட் 2025 ஆந் திகதியன்று கொழும்பு 02 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் தனது கடமையை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார்.


37 ஆவது பொலிஸ்மா அதிபர் அவர்களின் நியமனமானது இலங்கை பொலிசிற்கு சிறப்பான ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகின்றது. அதற்கான காரணம் இலங்கை பொலிசுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் மூன்று நிலைகளிலும் இணைந்து இவ்வாறு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.


09 பெப்ரவரி 1969 ஆந் திகதியன்று பிறந்த பிரியந்த லியன ஆரச்சிகே சமன் பிரியந்த, தொடாங்கொடை நேஹின்ன முதல்நிலைப் பாடசாலையில் அடிப்படைக் கல்வியைப் பெற்று, பின்னர் களுத்துறை ஞானோதயம் மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் மேற்கொண்டுள்ளார்.


கல்விக் கற்கும் போதே இலங்கை பொலிஸ் துறையை தனது வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுத்து 20.05.1988 ஆந் திகதி பொலிஸ் சகாப்த்ததில் கனிஷ்ட பொலிஸ் பதவியில் சேர்ந்துள்ளார்.


மேலும், 1990 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்திற்கு தகுதிப்பெற்றுள்ளதுடன், 1992 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் நேரடி ஆட்சேர்ப்பில் பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகராகவும் இணைந்துள்ளார். பொலிஸ் சேவையில் இருக்கும் போதே 1993 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டப் பட்டப்படிப்பினை ஆரம்பித்து 1998 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார். தனது பட்டப்படிப்பினை அடிப்படை தகுதிநிலையாக பயன்படுத்தி 1999 ஆம் ஆண்டு பயிலுநர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நேரடியாக பொலிஸ் சேவையில் இணைந்து அடிப்படை பயிற்சியினை மேற்கொள்ளும் போது கௌரவ உயர் நீதிமன்றில் பிரசித்த நொத்தாரிசு, சத்தியபிரமான ஆணையாளர் மற்றும் சட்டத்தரணியாகவும் சத்தியபிரமானம் செய்து கொண்டார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவம் தொடர்பான வணிக நிருவாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.


2007 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராகவும், 2012 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகராகவும், 2016 ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும், 2020 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளார்.


அத்தியட்சகராக நேரடியாக பொலிஸ் சேவையில் இணைந்து அடிப்படை பயிற்சியினை மேற்கொள்ளும் போது கெளரவ உயர் நீதிமன்றில் பிரசித்த நொத்தாரிசு, சத்தியபிரமான ஆணையாளர் மற்றும் சட்டத்தரணியாகவும் சத்தியபிரமானம் செய்து கொண்டார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவம் தொடர்பான வணிக நிருவாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.


2007 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராகவும், 2012 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகராகவும், 2016 ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும், 2020 ஆம் ஆண்டு சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளார்.


திரு. பிரியந்த வீரசூரிய அவர்களின் 37 வருடகால சேவையில் பல செயல்பாட்டு பிரிவுகளில் பணிப்பாளராகவும், பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகராகவும் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் மற்றும் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றியதுடன், நிருவாகக் கடமைகள் மற்றும் மேலதிக கடமைகளில் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தராகவும் செயல்பட்டார். சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் 27.09.2024 ஆந் திகதியிலிருந்து பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்காக அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன் கௌரவ சனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டார்.


பொலிஸ் சேவையிலுள்ள பல்வேறு கடமைகள் மற்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பல திட்டங்களையும் தீவிரமாக செயல்படுத்தினார்.


அதன் பெறுபேறாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்புரிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சீருடைகளின் தேவைப்பாடுகள், விளையாட்டு சீருடைகள், விளையாட்டு பாதணிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விசேட கடமையின் போது பயன்படுத்துவதற்காக படுக்கை போர்வைகள் போன்றவற்றை வழங்குவதிலும் திறன்பட செயல்பட்டார்.


பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய போது சர்வதேச பொலிசாருடன் இராஜதந்திர மட்டத்திலான சிறந்த நற்பைப் பேணி குற்றவாளிகளை வெளிநாடுகளில் கைது செய்வதற்காகவும் அவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்காகவும் சர்வதேச பொலிசாரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதேபோன்று கனிஷ்ட மற்றும் பரிசோதகர்கள் தரங்களில் புதிய ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், கனிஷ்ட, பரிசோதகர் தரங்களில் மற்றும் நிர்வாக தரங்களில் SOR ஐ அனுமதிப்பதற்கும் பதவி உயர்வுகளிலுள்ள சிக்கல்களை தீர்த்து நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.


பொதுமக்களுக்காக பொலிஸ்மா அதிபர் உதவிச் சேவைகள், பொதுமக்கள் தினத்தை நடாத்திவருகின்றமை, எல்லா சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள்


2/3


மற்றும் தகவல்களை வழங்குவதற்காக Whatsapp தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியமை, Govpay போன்ற ஒழுங்குமுறைத் திட்டங்களை ஆரம்பித்தமை மற்றும் மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள் ஆரம்பித்தல், பொலிஸ் மற்றும் தகவல்களை வழங்குவதற்காக Whatsapp தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியமை, Govpay போன்ற ஒழுங்குமுறைத் திட்டங்களை ஆரம்பித்தமை மற்றும் மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள் ஆரம்பித்தல், பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையின் தரத்தை உயர்த்துதல் என்பன இவரின் சிறப்பம்சமாக கருதப்படுகின்றது.


பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளை முறையாக கண்காணித்து பலவீனமான உத்தியோகத்தர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஊழல் செய்யும் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக பொலிஸ் துறையினை மேம்படுத்துவது இவரின் நீண்டகால திட்டமாகும். அதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுக்கமைய எளிய தீர்வுகளுக்குப் பதிலாக திருமணமான பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை அதிகரிப்பதற்காகவும் புதிய குடியிருப்புகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நீண்டகால தீர்வினை பெற்றது சிறப்பான பணியாக கருதப்படுகின்றது.


பிரியந்த வீரசூரிய அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உத்தியோகத்தர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பாடநெறியும். பங்காளதேஷில் நீண்ட தூர பாதுகாப்பு பயிற்சிப் பாடநெறியும், வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலியாவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவ பயிற்சியும் தாய்லாந்தில் முகாமைத்துவம் மற்றும் நிருவாகப் பயிற்சியும், மலேசியாவில் செயல்முறைப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் தொடர்பான பாடநெறியும், ரஷ்யாவில் பாதுகாப்பு தொழிநுட்பம் தொடர்பான பயிற்சி நெறியும், அமெரிக்காவில் White Collar Crime தொடர்பான பயிற்சி நெறியும், றோயல் மலேசியா பொலிசில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவ பாடநெறிகள் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சி பாடநெறிகளையும் அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.


மேலும், 2008 இலிருந்து 2011 வரை கிழக்கு திமோர் மற்றும் ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் நடவடிக்கைகளுக்கு தனது பங்களிப்பினையும் வழங்கியுள்ளார்.


இலங்கை பொலிசில் பல்வேறு பதவிகளில் தனது கடமையினை வகிதது மாத்திரமின்றி உண்மையாகவும் நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய திறமையான உத்தியோகத்தரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் இந்நாட்டின் 37 ஆவது பொ

லிஸ்மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.