இணுவில் பொது நூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு!
இணுவில் பொது நூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு!
தமிழகத்திலிருந்து நேற்றையதினம் (12 .08 .2025) செவ்வாய்க்கிழமை வருகைதந்த சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் திரு. அரங்க ராமலிங்கம் இணுவில் பொது நூலகத்திற்கு வருகைதந்து ஒரு தொகுதி நூல்களை கையளித்தார்.
நூலகத் தலைவர் ம.கஜந்தரூபன்,
உதவி நூலகர் திருமதி கலாவாணி சுபேந்திரன் ஆகியோரிடம் அன்பளிப்பாக கையளிக்கப்பட்டது. இவ்வாறு நூல்களை கையளித்த அவர் நூலகத்தில் இருந்த ஏனைய நூல்களையும் பார்வையிட்டார்.