சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஆன்மீக சொற்பொழிவும், உதவிகளும்..!
சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக ஆன்மீக சொற்பொழிவும், உதவிகளும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு
ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நேற்றைய தினம் காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.
இதில் “ஆயத்தமில்லை ” என்ற தலைப்பில் திருமதி சுதர்சன் அமுதகலா ஆன்மீக சொற்பொழிவை நிகழ்த்தினார்.
தொடர்ந்து காட்டுப்புலம், கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த யார்க்கரு விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி கற்கும் மாணவனுக்கும், பத்தமேனி, அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த யா/ அச்சுவேலி மத்திய கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவிக்கும் கற்றல் நடவடிக்கைக்கைக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை கடந்த 29/06/2025 அன்று பதுளை- எட்டாம்பிட்டிய, 2 ம் பிரிவில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 640,000 பெறுமதியில் தேர் செய்வதற்கு முதல் கட்டமாக ரூபா 200,000 நிதி ஆலய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தார்