Breaking News

இலங்கை தேசிய சமாதான பேரவையால் அதிகாரப்பகிர்வு எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.....!



இலங்கை தேசிய சமாதான பேரவையால் அதிகாரப்பகிர்வு எனும் தொனிப்பொருளில் விசேட செயலமர்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.....!




இலங்கை தேசிய சமாதான பேராவையால் "அதிகார பகிர்வினை சூழவுள்ள எதிர் மறை கருத்துக்களை எதிர் கொள்ளல் மற்றும் உள்ளடக்கத்திற்கான வலியுறுத்தல்"எனும் தொனிப்பொருளில் அதிகாரப்பகிர்வு தொடர்பான விசேட செயலமர்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சியில் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு வடமாகாண சபையின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமானது 


இவ் செயலமர்வில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பான பல்வேறு வகையான கருத்துக்கள் பற்றி கலந்துரையாட பட்டதுடன் அதிகார பகிர்வு தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாட பட்டது 


மற்றும் மாகாண சபை தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினர் கலந்து கொள்வது அவசியம் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் மற்றும் கேள்விகளும் முன் வைக்கப்பட்டது 


இவ் விசேட கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மாதர் சங்கம் மற்றும் கிராம மட்டத்தில் இருந்து செயற்படும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.