குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் சிறப்புற்ற மகா கும்பாபிஷேகம்
குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் சிறப்புற்ற மகா கும்பாபிஷேகம்
குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்-2025 இன்று ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) காலை-07 மணி முதல் காலை-08.10 மணி வரையுள்ள சுப வேளையில் சிறப்புறவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
குப்பிழானைச் சேர்ந்த புலம்பெயர் அடியவர்கள் மற்றும் கிராமத்து அடியவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்றுத் திகழ்கின்றது.
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிவஸ்ரீ. கிருஷ்ண பிரணவக் குருக்களைப் பிரதிஷ்டா பிரதம குருவாகக் கொண்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்களின் நெறிப்படுத்துதலில் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியிருந்தது.
இவ் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகக் கிரியைகள் கடந்த வியாழக்கிழமை (10.07.2025) அதிகாலை-05.30 மணியளவில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஆரம்பமானது. நேற்றுச் சனிக்கிழமை (12.07.2025) காலை-09.20 மணியளவில் அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் ஆரம்பமாகி மாலை-04 மணி வரை இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.