கரைவலை தொழிலுக்காக உடுத்துறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆடு
கரைவலை தொழிலுக்காக உடுத்துறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆடு
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்காக ஆடு ஒன்று கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் உடுத்துறை கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவரின் அனுமதியுடன் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் இடம்பெற்றுவருகின்றது
உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதால் சிறு தொழிலாளிகள் மோசமாக பாதிக்கப்பட்டுவருவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை
இந்நிலையில் உடுத்துறையில் புதிதாக கரைவலை தொழில் கடலில் இறக்கும் நிகழ்விற்கு ஆடு ஒன்று கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்படும் காட்சி மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது