இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம்......!
இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம்......!
இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம் உள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது அதாவது பாரியளவு மின் இணைப்பினை கொண்ட மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது
முறிந்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாது உள்ளது ஆனால் தற்போது காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழுந்து பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையிறவு உப்பளம் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது
இது மட்டுமன்றி A9வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயத்திலும் உள்ளது எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது அவ்வீதி பகுதியில் பயணிக்கும் பயணிகள் பயந்தபடியே பயணிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனர்
இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும்
மற்றும் இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை இதனை இலங்கை மின்சார சபை கண்டும் காணாமலும் இருப்பதற்கான காரணம் தெரியவரவில்லை இவ்வாறே பூநகரி பிரதான வீதியிலும் ஒரு சில மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளன தெரிய வருகிறது