முன்பள்ளி சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம்!
முன்பள்ளி சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம்!
முன்பள்ளி சிறார்களிற்கு 65 இலட்சம் நிதி ஒதுக்கீடு மூலம் சத்துணவு வழங்கும் திட்டம் மானிப்பாய் பிரதேச சபையால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஓர் அங்கமாக மானிப்பாய் மேற்கு அரும்புகள் முன்பள்ளி சத்துணவுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (01) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
நிகழ்வில் வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தன், பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு முன்பள்ளி சிறார்களிற்கு சத்துணவை வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.