கண்டாவளை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவும் விருது வழங்கு விழாவும் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....!
கண்டாவளை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவும் விருது வழங்கு விழாவும் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கண்டாவளை பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் நேற்றைய தினம் காலை 9 மணியளவில்
கண்டவளை பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அ.ஜெயாளன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிர்வாக தெரிவு மற்றும் கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சகல கழகங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். விருந்தினராக மேலதிக திட்டமிடல் பணிப்பாளர் கண்டாவளை ,
தேசிய இளைஞர் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் தேசிய இளைஞர் மன்றத்தில் கடந்த கால செயற்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தற்போதைய இளைஞர் கழகங்களின் மாவட்ட சம்மேளன தலைவர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிர்வாக தெரிவினை தொடர்ந்து 2024 ஆண்டு இளைஞர் விருது விழாவிலே கண்டாவளை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண ரீதியில் பங்கு பற்றி மாகாணத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கான நிறைவு பரிசும் கௌரவிப்பும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் ரபர் ஸ்டாம்ப் மற்றும் லெட்டர் பேட் ஆகியன வழங்கி வைக்க
ப்பட்டது