சந்நிதியான் ஆச்சிரமம் முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு 340,000 ரூபா பெறுமதியான உதவிகள்..!
சந்நிதியான் ஆச்சிரமம் முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு 340,000
ரூபா பெறுமதியான உதவிகள்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்
தின் கோரிக்கைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு ரூபா 340,000 பெறுமதியான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
மேலும் மன்னார் பெரியமடு, காயாநகர் கிராமத்தில் பொருளாதாரம் குன்றிய குடும்பமொன்றிற்கு தற்காலிக வீடு அமைப்பதற்கு ரூபா 210,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை கடந்த 11/07/2025 அன்று சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவை ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் தவத்திரு அருணகிரிநாதர் சுவாமி
களின் குருபூசையில் சுவாமிகளின் ஆற்றுகை தொடர்பான தெய்வீக வில்லிசை இடம்பெற்றது.
வில்லிசையை ஈழ நல்லூர் ஶ்ரீதேவி வில்லிசை குழு
இயக்குனர் எஸ்.எஸ்.குருஜி அவர்களின் தலைமையில்,
பக்திப்பாடல்கள் இசைக்கப்பட்டன. இதில் பாடல்களை திரு லோகநாதன் அவர்களும், ஹார்மோனிய இசையை இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன், அவர்களும்,
வில்கடம் இசையை ந. விமலநாதன், அவர்களும்,
மிருதங்கம் இசையை கலாவித்தகர் க.சிவகுமார் அவர்களும்,
உடுக்கிசையை வித்துவான் வே.சிவமூர்த்தி ஆகியோரும் இசைத்தனர். அதில் உதவித் திட்டங்களாக தொண்டைமானாறு கெருடாவில் தெற்கு விவேகானந்தா முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுக்காக ரூலா 20,000 நிதியும்,
ஸ்ராலின் வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு மாதாந்த மருத்துவ கொடுப்பனவாக ரூபா 10,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள், பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.