இலங்கை வங்கியின் முகவர் வங்கியியல் திட்டம் இன்றய தினம் முள்ளியான் மற்றும் சுண்டிக்குள உப அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைப்பு...!
இலங்கை வங்கியின் முகவர் வங்கியியல் திட்டம் இன்றய தினம் முள்ளியான் மற்றும் சுண்டிக்குள உப அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைப்பு...!
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளாவிய 4006 தபால் அலுவலகங்கள் மற்றும் உப தாபால் அலுவலகங்களில் இலங்கை வங்கியிச் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் முதற்கட்டமாக 100 தபால் அலுவலகங்களில் வடமாகாணத்தின் 8ஆவது connect முகவர் வங்கியல் திட்டம் இன்றய தினம் காலை 10 மணியளவில் முள்ளியான் உப அஞ்சல் அலுவலக முன்றலில் ஆரம்பமானது
இந் நிகழ்வில் ஆரம்பத்தில் இலங்கை வங்கியின் முகவர் வங்கியல் திட்டமானது சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முதற் கட்டமாக முகவர் வங்கியல் திட்டத்தின் வாடிக்கையாளரின் கொடுக்கல் வாங்கல் திட்டமானது முள்ளியான் உப அஞ்சல் அதிபர் செல்வி p.அனற்ஜெனிலாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
அதனை தொடர்ந்து இவ் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இதனால் மக்கள் அடையும் நன்மைகள் தொடர்பாகவும் இலங்கை வங்கியின் முக்கியஸ்தர்களால் மக்கள் மத்தியில் எடுத்து கூறப்பட்டது அத்துடன் இலங்கை வங்கியானது வாடிக்கையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடனும் மற்றும் இவ் திட்டத்தின் மூலம் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக இலங்கை வங்கியின் கிளையினை தொடர்பு கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது
இவ் நிகழ்வில் கட்டைக் காட்டு பங்கு தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அடிகளாரும் திரு v.சினைந்தன் உதவி முகாமையாளர் இலங்கை வங்கி வடமாகாணம் அவர்களும் திரு p.தினேஸ்குமார் பிரதேச முகாமையாளர் வலி வடக்கு இலங்கை வங்கி அவர்களும் மற்றும் திரு E.சந்தனு சிரேஸ்ட முகாமையாளர் இலங்கை வங்கி வடமாகாணம் அவர்களும் மற்றும் மருதங்கேணி இலங்கை வங்கி கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அஞ்சல் அத்தியோகஸ்டர் வவுனியா A.செந்தில்குமார் அவர்களும் மற்றும் முள்ளியான் உப அஞ்சல் அதிபர் p.அனற்ஜெனிலா மற்றும் தபால் அஞ்சல் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்டத்தில் இருந்து செயற்படும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பின் இவ் சேவை திட்டமானது 12 மணியளவில் சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது