Breaking News

யாழில் நேற்றுமுன்தினம் (25) அளவுக்கு அதிகமான மதுபானத்தை பாவித்து குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

 யாழில் நேற்றுமுன்தினம் (25) அளவுக்கு அதிகமான மதுபானத்தை பாவித்து குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். 



யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பாவித்து விட்டு வீட்டுக்கு வந்து உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.


பின்னர் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் அவர் தூக்கில் தொங்குவதை அவரது பிள்ளைகள் அவதானித்தனர். இந்நிலையில் அவரை தூக்கில் இருந்து மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்தியதால் தன்நிலை மறந்து இவ்வாறு உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படு

கிறது.