Breaking News

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு.....!



யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு.....!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


புலனாய்வு துறையினருக்கும் கடற்படையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசாரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை வத்திராயன் பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது 


இச் சுற்றி வளைப்பில் உதய குமார் ஜெசிக்குமார் எனும் சந்தேக நபரும் 34 பொதிகள் அடங்கிய 60.256 kg கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர் 


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றதோடு கைப்பற்ற பட்ட போதைப்பொருளினையும் சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி உள்ளனர்