கடலிற்கு சென்றவர் இதுவரை கரை திரும்பவில்லை, கட்டுமரம் மீட்பு, தேடும் பணி தீவிரம்..!
கடலிற்கு சென்றவர் இதுவரை கரை திரும்பவில்லை, கட்டுமரம் மீட்பு, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையை இதுவரை கரை திரும்பவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
இன்று அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்க்காக சென்றுள்ளார்.
வழமையாக 9 :00 மணியளவில் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
இதனை அவதானித்த தேடிச்சென்ற மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேசகத்தில் தற்போது மணல்காடு மீனவர்கள் தற்போது பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்ட்டுவருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்
றனர்.