மாபெரும் வர்த்தக சந்தை இன்று போக்கறுப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.. !
மாபெரும் வர்த்தக சந்தை இன்று போக்கறுப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.. !
யாழ் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பில்
இன்று(26) மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது இச் சந்தையானது வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்றது
இச் சந்தையில் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றி வரவேற்பு நடனத்துடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது
இச் சந்தை நிகழ்வில் வடமராட்சி கிழக்கு உள்ளுர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தமது கைவினை பொருட்கள் மற்றும் உலர் உணவுகள் மரக்கறி வகைகள் மற்றும் ஆடைகள் என்பவற்றை காட்சிப்படுத்தி தமது வர்த்தக நடவெடிக்கைகளை மேற்கொண்டனர்
இவ் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .