Breaking News

70 எழுவது வருடங்களின் பின்னர் தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புலரமைப்பு பணிகள் ஆரம்பம்

 70 எழுவது வருடங்களின் பின்னர் தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புலரமைப்பு பணிகள் ஆரம்பம்




கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதி கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.


இதனால் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில் குறித்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் 21.06.2025 ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மோகன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கலத்தினர், கண்டாவளைப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இவ்விதையானது 35 மில்லியன் ரூபாசெலவில் நிரந்தர தார் ரீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக

 இடம்பெற்றது