Breaking News

போலி பிரச்சாரம் செய்யும் தேசிய மக்கள் சக்தியினர் ()கண்டும் காணமலும் இருக்கும் அதிகாரிகள்

 போலி பிரச்சாரம் செய்யும் தேசிய மக்கள் சக்தியினர் ()கண்டும் காணமலும் இருக்கும் அதிகாரிகள் 



எதிர் வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினர் போலிப் பிரச்சாரம் செய்து வரும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சமரபாகு வட்டாரத்தில் போட்டியிடுவதாக கூறி நபர் ஒருவர் பிரச்சாரம் செய்து வருகின்றார் குறித்த நபர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றார் இதனை அவதானித்த ஊர் மக்கள் மற்றும் சக கட்சி வேட்பாளர்கள் பல முறைப்பாடுகளை செய்துள்ளனர் 


இந்த நபர் தொடர்பாக தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்சி வேட்பாளர் ஆவணம் எல்லாவற்றையும் பரிசிலித்து பார்க்கும் போது அவரின் பெயர் எவற்றிலும் இல்லை இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியபூர்வ இனையத்தில் பார்வையிட முயற்சி செய்த போதும் அதில் பார்வையிட முடியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும் 


இச் சம்பவம் தொடர்பாக தேர்தல்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை