முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கும், அரசுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது
முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கும், அரசுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
அதில் இவ்வாறான சந்திப்பை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்தும் நடாத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.
இச் சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் அமைப்பு பிரதிநிதிகள் காத்திரமான விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளார்கள்.
இவ்வாறான சந்திப்பு வாய்ப்புகளை உபாயமாக கையாளவேண்டும். குறிப்பாக தொடர் இல்லாமல் ஆளுக்கு ஒரு தலைப்பை கதைக்க ஆரம்பித்ததில், அச்சாறுபோல் ஆக்கிவிடவேண்டாம் எனும் அரசதரப்பு கோரலும் அங்கு எழுந்துள்ளது.
இவ்வாறான சந்திப்புக்களின்போது முன்கூட்டியே தயாறாக்கப்பட்ட முன்மொழிவுகளுடன், முறையாக அதனை முன்வைப்பவர்கள் நெறிப்படுத்தப்படவேண்டும்.
சந்திப்பவர்கள் கொழும்பை மையப்படுத்தியவர்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. தேசிய ரீதியான பங்களிப்புடனான பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும்.
முஸ்லீம்களுக்கு தீர்க்கப்படவேண்டிய அரசியல் தேவைப்பாடுகள், நீண்டகாலமாகவும் அண்மைக்காலமாகவும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு ரீதியாக தொகுக்கப்பட்ட கோரல்கள் இருக்கவேண்டும்.
வடக்கில், கிழக்கில், தெற்கில், மேற்கில் என பல திசைகளிலும், பல மாவட்டங்களிலும் பரந்து வாழும் முஸ்லீம்களுடைய தனிப்பட்ட தேவைப்பாடுகள், பொதுவான தேவைப்பாடுகள், பிரச்சினை என பல உண்டு. அவை தரவுகளுடனான தொகுப்பாக பரந்துபட்டதாக இல்லாமல்...
ஒரு பள்ளிவாசல் பிரச்சினை, ஒரு கைதுப் பிரச்சினை என இலக்கு சுருங்கிவிடக் கூடாது.
குறிப்பாக யுத்த காலம் தொட்டு முஸ்லிம் சமூகம் இழந்த பல்வேறு இழப்புக்களுக்கும், அநீதிகளுக்கும் நிலையான தீர்வுகள் எதுவும் எந்த அரசுகளாலும் முன்வைக்கப்படவில்லை. குறைந்தது தீர்வு மேசைகளில் பேசப்படவும் இல்லை.
அதற்கான முதற் காரணம் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், சிவில் பிரதிநிதிகளும் கேட்கவேண்டிய இடத்தில், கேட்கவேண்டிய முறையில் கேட்கவில்லை என்பதே உண்மை. பலர் கேட்காமல் இருப்பதையே தங்களுடைய மூலதனமாக பாவித்து வைறு வழர்த்துவிட்டனர்.
ஒரு உதாரணத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 25000 ஏக்கருக்கும் அதிகமான வளமான காணிகள் கடந்த கால இன வன்முறைகளால் அரச திட்டமிடலுடன் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏனைய மாவட்டங்களிலும் உண்டு.
வடக்கிலும் கிழக்கிலும் யுத்தகாலத்தில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு முறையான மீள்குடியேற்றம், இழப்பீடு இன்னுமில்லை.
இவ்வாறாக உயிர் இழப்புக்கள், சொத்திழப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் என பல்லாயிரம்பேர்கள் இழந்து நிற்க எதை நாம் பேசுகிறோம்.
எனவே இந்த ஆட்சியிலாவது முறையான தீர்வுகளை முன்மொளிந்து பெற்றுக்கொள்ள முஸ்லிம் சமூகம் தயாராகாது விட்டால்...
அச்சாறும், புரியாணியும், வட்டிலப்பமும்தான் மிஞ்சும்.
என என்கின்றனர்