Breaking News

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா முன்னாயத்த வேலைகள் தொடர்பான களவிஜயமும் கலந்துரையாடலும்..!

 வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா முன்னாயத்த வேலைகள் தொடர்பான களவிஜயமும் கலந்துரையாடலும்..!



முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா எதிர்வரும் 09.06.2025 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.


இவ்விழா தொடர்பிலான முன்னாயத்த வேலைகளின் முன்னேற்றம் தொடர்பான களவிஜயமும் கலந்துரையாடலும் இன்றய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. கடந்த 30.04.2025 அன்று இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொங்கல் விழா விற்கு வருகைதரும் பக்தர்களிற்கான அடிப்படை வசதிகள் பாதுகாப்பு போன்ற விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.


இந்தக் களவிஜயத்தின் போது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கரைதுறைப்பற்று பிரதேச உதவிப் செயலாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கரைதுறைப்பற்று பிரதேச பபையின் செயலாளர் சுகாதார பரிசோதகர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.