உலகெங்கும் முடங்கிய புலனம்(வாட்ஸப்)..!
உலகெங்கும் முடங்கிய புலனம்(வாட்ஸப்)..!
மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வட்ஸ்அப் செயலி இன்று (12-04-2025) உலகளவில் பல பயனர்களுக்கு செயலிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சுமார் 88 சதவீத பயனர்கள் வட்ஸ்அப் குழுக்களில் தங்கள் செய்தியை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 சதவீத பயனர்கள் பயன்பாட்டிலேயே சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உள்நுழைவு சிக்கல்களுக்கு முகங்கொடுத்த 2 சதவீதத்தினரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.