செம்பியன் விளையாட்டு கழகத்தின் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
செம்பியன் விளையாட்டு கழகத்தின் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தெற்கு செம்பியன் விளையாட்டு கழகத்தினர் மஹா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக நேற்றய தினம் (14)
இரவு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்
இவ் சுற்றுப்போட்டியானது நேற்றய தினம் இரவு 8மணி அளவில் கழக தலைவர் சே.டிலக்சன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது குறித்த போட்டியில் 15ற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன
சுற்றுப்போட்டியானது எந்த வித குழப்பங்களும் இன்றி கழக அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை பல போட்டிகளின் மத்தியில் அம்மன் ping pong Aஅணியினர் தன்வசப்படுத்தினர்
இப் போட்டியினை பார்வையிடுவதற்கு வடமராட்சி கிழக்கில் பல இடங்களில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்