Breaking News

சாதனையாளர்களை கௌரவிக்கும் Top 100விருது வழங்கும் விழா இன்றைய தினம். 15 கண்டியில் இடம்பெற்றது

 

சாதனையாளர்களை கௌரவிக்கும் Top 100விருது வழங்கும் விழா இன்றைய தினம். 15 கண்டியில் இடம்பெற்றது.



இந்நிகழ்வானது இலங்கை-இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் தினகரன் ஊடக அனுசரனையிலும் நடத்தப்பட்டது.

இதில் இலங்கை முழுவதுமுள்ள கலைஞர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,  ஊடகவியலாளர்கள் மற்றும. ஊடகத்துறை சார்ந்தவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் இலங்கை முழுவதும் உள்ள பல ஆளுமைகளை கௌரவிக்கும் வகையில் பல விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் சில ஆளுமைகளே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

இவ் விருது வென்ற ஆளுமைகளை இன்று நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்

இவ் விருது வழங்கல் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச ஊடகவியலாளர்  P. லின்ரன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் கே.எம்.வித்தகனும் கௌரவிக்கப்பட்டு யாழ்.மண்ணுக்கு பெருமை சேர்த்து தந்தனர்.

இவ் விருது விழாவில் பல மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.