ஒலிபெருக்கி பாவனைக்கு இனி ஆப்பு...!
ஒலிபெருக்கி பாவனைக்கு இனி ஆப்பு...!
ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல்.
அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக,
வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் Kavitha Uthayakumar தலைமையில் கடந்த 04.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு இந்து ஆலய நிர்வாகத்தினர்களுடனான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஏற்கனவே பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும் சேர்த்து பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
01. திருவிழா காலங்களில் காலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி வரையும், இரவு 08.00 மணிவரையும் 4 ஒலிபெருக்கிகள் மூலம் 100M எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
02. சாதாரண நாட்களில் ஒலிபெருக்கிப் பெட்டி ( BOX ) மூலம் ஆலய வளாகத்தில் மட்டும் சத்தம் குறைவாக வைத்து ஒலிபரப்புச் செய்ய முடியும்.
03. பரீட்சை நடைபெறும் காலங்களில் ஒலிபெருக்கி பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.