செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.. அகழ்வுப்பணிக்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை வழங்க நீதிமன்னறம் உத்தரவு
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியை அகழ்வதற்கு ஆன நீதி மதிப்பு அறிக்கையை மன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதி ஆனந்தராஜா உத்தரவற்றுள்ளார்.
அண்மையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட செம் மணி சிந்துபாத்தி மயானத்தில் எரி மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய யாழ் போதன வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகள் மனித எச்சங்கள் மனித எச்சங்கள் என்றும் சிறுவர்களின் பாற்பற்கள் இருப்பதும் சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குறித்த விடையம் தொடர்பில் ஆராயப்பட்டபோது வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி தற்பரன் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் நல்லூர் பிரதேச சபை அதிகாரிகள் பிரசன்னமயி இருந்தனர்.
சட்டத்தரணி சுகாஷ் குறித்த மயானத்தில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் முடியும் வரை குறித்த பகுதி பொலிசாரின் பாதுகாப்பில் இருப்பதோடு குறித்த மயான நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவது நம்பிக்கையை ஏற்படுத்தும் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று நிர்வாக சபையைச் சேர்ந்த ஐந்து நபர்களின் பெயர்களை வழங்குமாறு உத்தரவிட்டது
அத்தோடு அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி தொடர்பான அறிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் இணைந்து நிதி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதனை மேல் நீதிமன்றம் ஊடாக நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது