மாவை சிவம் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு உதவி வழங்கும் திட்டங்கள் முன்னெடுப்பு
மாவை சிவம் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு உதவி வழங்கும் திட்டங்கள் முன்னெடுப்பு
இவ் நிகழ்வானது கடந்த 25 ம் திகதி கனக செல்லா அறக்கட்டளை மன்றத்தின் ஸ்தாபகர் மாவை சிவம் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவி வழங்கும் திட்டங்கள் அவரது வழிகாட்டலில் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் வவுனியா மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ் மாவட்டம் போன்ற பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, யாழ் மாவட்டத்தில் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பொங்காத்த சிவஞான வைரவர் ஆலய அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் 35 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் மன்றத்தின் நிர்வாக குழுவினரும், பாடசாலையின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
