தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தற்காலிக இணைப்புக்காலம் நீடிப்பு!
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தற்காலிக இணைப்புக்காலம் நீடிப்பு!
இலங்கை கல்வி அமைச்சு தேசிய பாடசாலை ஆசிரியர்களின் தற்காலிக இணைப்பு (Temporary Attachment) தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்குகின்றன.
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு 2026.03.03 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்புக்கள், தற்போது 2026.06.30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள தற்காலிக இணைப்புகள் தொடர்பாக அதிபரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே இந்த நீடிப்பு செல்லுபடியாகும்.
இது தொடர்பாக ஆசிரியர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் கடிதங்கள் எதுவும் அனுப்பப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கட்டாய/ஆண்டு இடமாற்றங்கள் மூலம் புதிய சேவை நிலையம் ஒதுக்கப்பட்டிருந்தால், தற்காலிக இணைப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் புதிய சேவை நிலையத்தில் பணியில் இணைய வேண்டும்.
கல்வி அமைச்சின் அறிவிப்பை பெற
https://1teachmore.lk/national-school-teachers-temporary-attachment/
#EducationMinistry #Teachers #SriLanka
