செம்பியன் பற்று வடக்கு கலைத்தமிழ் இளைஞர் கழக பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் மிக சிறப்பாக இடம்பெற்றது.......!
செம்பியன் பற்று வடக்கு கலைத்தமிழ் இளைஞர் கழக பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் மிக சிறப்பாக இடம்பெற்றது.......!
இன்றைய தினம் (1/11/2026)செம்பியன் பற்று வடக்கு கலைத்தமிழ் இளைஞர் கழக பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் மிக சிறப்பாக இடம்பெற்றது
இதன்போது கழகத்தின் எதிர்காலச் செயற்பாடுகள், இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், புதிய நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இளைஞர்களின் ஒற்றுமையையும் சமூகப் பங்களிப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டம், கழகத்தின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது.
புதிய நிர்வாக சபையின் ஊடாக கழகத்தின் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறிஞ்சி குமரன் மற்றும் மாமுனை கடல் தொழிலாளர் சங்க தலைவர் ஓவிய சீலன் மாமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் மாமுனை கலைமகள் விளையாட்டு தலைவர் வசந்த குமார் வடமராட்சி கிழக்கு நன்னீர் மீன்பிடி சங்க தலைவர் முகுந்தன் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
