இலங்கை முழுவதும் அக்டோபர் 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ‘MANITHEE: THE FIRE BIRD’!
🎬 இலங்கை முழுவதும் அக்டோபர் 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ‘MANITHEE: THE FIRE BIRD’!
இலங்கைத் திரையுலகில் ஈழத்துத் திரைப்படமொன்று மற்றுமொரு முக்கிய மைல்கல்லை நோக்கிப் பயணிக்கிறது!
TRM Picture தயாரிப்பில், தீபன் அவர்களின் வழங்கலில், MJ Nitharsan இயக்கத்தில் உருவாகியுள்ள ‘MANITHEE: THE FIRE BIRD’ திரைப்படம், இலங்கையின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான EAP Films & Theatres நிறுவனத்தின் விநியோகத்தில், எதிர்வரும் 2026 அக்டோபர் 30ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மர்மம், அறிவியல் மற்றும் உயிர்வாழ்வுப் போராட்டம் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், கனடாவில் வெளியானதைத் தொடர்ந்து இலங்கை ரசிகர்களையும் சந்திக்கத் தயாராகியுள்ளது.
ஈழத்துக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவான இத்திரைப்படம், ஈழத் திரையுலகின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கியமான படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
