Breaking News

இனந்தெரியாத நபர்களால் NPP உறுப்பினர் மீது தாக்குதல்; மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை

 இனந்தெரியாத நபர்களால் NPP உறுப்பினர் மீது தாக்குதல்; மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை



வடமராட்சி கிழக்கு, பருத்தித்துறை:

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தீவிர செயற்பாட்டாளரும், வடமராட்சி கிழக்கு மத்திய குழு உறுப்பினருமான வேல்மாறன் சைதன்யன் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நேற்று 17ஆம் திகதி மாலை வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேல்மாறன் சைதன்யன் தனது பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன், அது தொடர்பாக சில சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிலும் தனது சொந்தப் பெயரில் எழுதி வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்தப் பின்னணியில், அவரது செயற்பாடுகளுடன் தொடர்புடைய காரணங்களால் அல்லது குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.