கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு ரஹ்மத் மன்சூர் விஜயம் ----------
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு ரஹ்மத் மன்சூர் விஜயம்
----------
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள கமு/ கமு / மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு
(தேசிய பாடசாலை) கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் நேரடியாக விஜயம்
மேற்கொண்டார்.
இதன் போது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் பாடசாலை மாணவர்களின் தற்போதைய கல்வி நிலைகள் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியினை முன்னேற்ற காரமாக கொண்டு செல்ல நவீன தொழில்நுட்ப கல்வி முறை நடவடிக்கைகள் தொடர்பிலும் பாடசாலை அதிபர் எம்.நௌசாட் அவர்களிடம் ரஹ்மத் மன்சூர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் பாடசாலை நிலைமைகளை
பார்வையிட்டதுடன் பாடசாலையில் நிலவும்
பெளதீக குறைபாடுகள் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக தன்னாலான உதவியினை மேற்கொள்ள ஒத்துழைப்பேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் இதன் போது தெரிவித்தார்.
இதன் போது, பாடசாலை பிரதி,உதவி அதிபர்கள் ஊடகவியலாளர் எம்.என்.எம் அப்றாஸ் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெ .எம்.ஏ.பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்வி நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும் நோக்கில்,பாடசாலைகளின் தேவைகளை நேரில் அறிந்து, சாத்தியமான உதவிகளை முன்னெடுப்பது இவ்வாறான விஜயங்களின் ரஹ்மத் மன்சூரின் நோக்கமாகும் .
