Breaking News

செம்மணி இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள பேரணிக்கு ஆதரவு கோரி வடமராட்சியில் துண்டுபிரசுரம் விநியோகம்..!



செம்மணி இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள பேரணிக்கு ஆதரவு கோரி வடமராட்சியில் துண்டுபிரசுரம் விநியோகம்..!



செம்மணி இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 13/09/2026 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் இன்றைய தினம் பருத்தித்துறை நகரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


இதில் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி ந.காண்டீபன் மற்றும் தமிழ் தேசிய பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு பருத்தித்துறை வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு தூண்டுப் பிரசுரங்களை வழங்கிவைத்து போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.