Breaking News

ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!

 ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!



ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சிக்கல் அல்லது நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணம் ஏற்படும். அந்த நேரத்தில் நாம் எடுக்கும் ஒரு முடிவு, ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடும் என ‘சிக்மா’ திரைப்படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.


‘சிக்மா’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,


“நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும். ஒரு பெரிய கஷ்டத்தில் சிக்கியிருப்போம். அப்போது நாம் எடுக்கும் ஒரு முடிவால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியிருக்கும்.


அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் கதையைத்தான் இந்த ‘சிக்மா’ திரைப்படம் பேசுகிறது.


இந்தப் படத்துடன் உங்கள் அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


#Sooriyannews #Sigma #SigmaMovie #JasonSanjay #JasonSanjaySpeech #TamilCinema #TamilMovie #TamilCinemaNews