Breaking News

விசாரணை முடிந்து வெளியேறிய கோட்டாபய! மிக் போர் விமானக் கொள்வனவில் சிக்கலா?

 விசாரணை முடிந்து வெளியேறிய கோட்டாபய! மிக் போர் விமானக் கொள்வனவில் சிக்கலா?


....



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.


கடந்த காலங்களில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகாரிகளால் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.