Breaking News

பருத்தித்துறை நகரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி 11ஆம் தேதி கவனயீர்ப்புப் பேரணி: மக்கள் ஆதரவைக் கோருகிறார் நகர சபை உறுப்பினர் ஜெயகோபி




பருத்தித்துறை நகரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி 11ஆம் தேதி கவனயீர்ப்புப் பேரணி: மக்கள் ஆதரவைக் கோருகிறார் நகர சபை உறுப்பினர் ஜெயகோபி




பருத்தித்துறை நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான தபால் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் நகர சபை ஆகியவற்றுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரையும், சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான சுற்றுலாப் பகுதியான  ஆக்கிரமித்துள்ள முகாம்களையும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




பருத்தித்துறை நகர சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி, வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும். அங்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதற்காகப் பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.




இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பருத்தித்துறை நகர சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும், என்.பி.பி (NPP) கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஏனைய அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடும் இந்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.




எனவே, நமது நகரின் பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் இந்த முக்கியப் பேரணியில் பருத்தித்துறை மக்கள் அனைவரும் பெருந்திரளாக அணிதிரண்டு தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்குமாறு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.