Breaking News

வடமராட்சி கிழக்கு பகுதியில் பேருந்து உரிய நேரத்தில் வராததால் பயணிகள் அசௌகரியம்: நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை: தொடரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் அட்டகாசம்....!

வடமராட்சி கிழக்கு பகுதியில் பேருந்து உரிய நேரத்தில் வராததால் பயணிகள் அசௌகரியம்: நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை: தொடரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் அட்டகாசம்....!

கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

கட்டைக்காட்டிலிருந்து காலை வேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து, வழமையான நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், பணி நிமித்தமாக யாழ்ப்பாணம் செல்லும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் உரிய நேரத்தில் சேவை பெற முடியாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் தாமதமாகவே தங்களது பணிமனைகளைச் சென்றடைகின்றனர்.

பேருந்து புறப்படும் சரியான நேரத்தை பயணிகளுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்தத் தாமத நிலைமையைத் தவிர்க்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணம் சாலை முகாமையாளருக்குப் பயணிகள் முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.