Breaking News

யாழ்ப்பாணம், வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 யாழ்ப்பாணம், வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த மூவரும் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் ஒருவதே படுகொலை செய்யப்பட்டிருந்தார். 


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். 


#srilanka #thinakaran #news #lka