வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் கொடியேற்றம்..!
வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் கொடியேற்றம்..!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று காலை 9:00 இடம்பெற்றது.
இன்று காலை 7:00 மணியளவில் விசேட பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து 8:00 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றன. சரியாக காலை 9:00 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.
கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் விசேட கிரியைகளை நடத்தினர்.
14/09/2026 ம் நாள் வரை சக்கரத்து ஆழ்வார் உள் வீதி உலா வருவதுடன் 7ம் திருவிழாவான 15/ 09/2026 அன்றிலிருந்து வெளி வீதி உலாவருவார்.
17.09.2026,, 8ம் திருவிழா அன்று குருக்கட்டு விநாயகர் தரிசனமும்,
19.09.2026 9ம் திருவிழாவான வெண்ணை திருவிழாவும், 20.09.2026 10ம் திருவிழாவான துகியுத்திருவிழாவும்
21.09.2026 11ம் திருவிழாவான கம்சன் போர் திருவிழாவும்,
23.09.2026 13ம் திருவிழாவான வேட்டை திருவிழாவும்,
24.09.2026 14ம் திருவிழாவான சப்றறத் திருவிழாவும், 25.09.2026 15ம் திருவிழாவான தேர்த்திருவிழாவும்,
26.09.2026 16ம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழாவும்,
27.09.2026 17ம் திருவிழாவான
கேணி/பட்டு தீர்த்த திருவிழா, கொடியிறக்கம் என்பன இடம்பெறவுள்ளன.
திருவிழாவிற்காக சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை போலீசாரும், மேற்கொண்டுள்ளதுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் மேற்கொண்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை, தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.
