Breaking News

அல்வாயில் அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை நினைவாக 5வது ஆண்டாக குருதிட கொடை முகாம்: 27 பேர் இரத்த தானம்!



அல்வாயில் அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை நினைவாக 5வது ஆண்டாக குருதிட கொடை முகாம்: 27 பேர் இரத்த தானம்!





அல்வாய் தெற்கு, மாலை சந்தைப் பகுதியில் அமரர் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கணபதி அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று (06-09-2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.




கணபதி அறக்கட்டளை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஒருங்கிணைத்த இக்குருதிட கொடை முகாமில், இரத்த தானம் வழங்குவதற்காக 60க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். எனினும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் 27 பேரிடமிருந்து மட்டுமே குருதி பெற்றுக்கொள்ளப்பட்டது.




உயிர்காக்கும் இந்த நற்பணிக்கு முன்வந்த கொடையாளர்களுக்கும், முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் கணபதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.




"உங்கள் இரத்த தானம் – ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்" எனும் நோக்கில் அல்வாயில் நடைபெற்ற இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.