Breaking News

ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ரோலெக்ஸ்' (Rolex) திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகர் சூர்யா சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார். அதனைத் தொடர்ந்து 'விக்ரம் 2' திரைப்படமும் அவரது பட்டியலில் உள்ளது. இருப்பினும், நேர்காணல்களின் போது 'ரோலெக்ஸ்' திரைப்படம் நிச்சயமாக உருவாக்கப்படும் என்றும், அதற்கான கதையை எழுதி வருவதாகவும் லோகேஷ் கூறி வருகின்றார். எனவே, 'ரோலெக்ஸ்' திரைப்படம் எப்போது அதிகாரப்பூர்வமாக உருவாகும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார். #sooriyannews #Srilanka #TruthAtAllCosts #rolex #surya

 ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்



இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ரோலெக்ஸ்' (Rolex) திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து நடிகர் சூர்யா சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார்.


அதனைத் தொடர்ந்து 'விக்ரம் 2' திரைப்படமும் அவரது பட்டியலில் உள்ளது.


இருப்பினும், நேர்காணல்களின் போது 'ரோலெக்ஸ்' திரைப்படம் நிச்சயமாக உருவாக்கப்படும் என்றும், அதற்கான கதையை எழுதி வருவதாகவும் லோகேஷ் கூறி வருகின்றார்.


எனவே, 'ரோலெக்ஸ்' திரைப்படம் எப்போது அதிகாரப்பூர்வமாக உருவாகும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.