Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவிழா கால ஆன்மீக உரை...!


சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவிழா கால ஆன்மீக உரை...!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 7ம் நாள் திருவிழாவான இன்று 

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின்,

ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு இடம்பெற்றது.


இதில் “உதித்தனன் உலகம் உய்ய ” என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரையினை சைவப்புலவர் S.T குமரன் நிகழ்த்தினார்.


இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.