Breaking News

தென்னை மானியம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு மக்களுக்கு தெளிவூட்டல்.

 தென்னை மானியம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு மக்களுக்கு தெளிவூட்டல்.



  தென்னை மரங்களை அரசாங்கத்திடமிருந்து இலவசமாக பெற்று அதற்கான மானிய பசலைகளையும் அத்துடன் ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளையும் பெறுவது தொடர்பாக கூட்டம் நேற்று புதன்கிழமை 19ஆம் திகதி அம்பன் கமலென சேவை திணைக்களத்தில் இடம்பெற்றது. 


இதில் வடமராட்சி கிழக்கு மணல்காடு தொடக்கம் தூண்டிக்குளம் வரையிலனா தென்னை பயிர்செய்கையாளார்களை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்கள் கொடுப்பவர்கள் பற்றி இந்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.ரவிமயூரன் தலைமையில் இடம் பெற்றது.       

இந்தநிகழ்வில் வட மாகாணத்தின் உதவி பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் கலந்து கொண்டு தென்னை பயிற்சியில் பரவும் வெண் செவ்வண்டின் தாக்கம், பெண் ஈக்களின் தாக்கம், ஏற்படும் நோய்கள் கருவண்டு தாக்கம் ஆகிய பற்றிய விளக்கங்களை பயனாளிகளுக்கு வழங்குவதுடன் தென்னை எப்படி பராமரிக்க வேண்டும் எப்படி அதற்குரிய கொடுப்ப னவுகளை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் 

 என்று விளக்கங்களை தென்னை பயிற்செய்கயாளர்களுக்கு வழங்கி வைத்தார் 

 புலோலி (23)