Breaking News

நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"

 நயன்தாரா படம் பார்க்க அடித்துப் பிடித்து நுழைவுச்சீட்டு வாங்கிய கவின்: வைரலாகும் சுவாரஸ்ய தகவல்!"



இயக்குனர் விஷ்ணு இடவன் இயக்கத்தில் 'ஹாய்' (Hi) திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிகர் கவின் நடித்துள்ளார். இந்தப் திரைப்படத்தின் திரை முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் பேசிய கவின்:


"சின்னத்திரையில் நடித்த கவின், நயன்தாராவுடன் நடிப்பதை எல்லாம் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்" என்று இணையத்தில் வந்த ஒரு கருத்தை தான் பார்த்ததாகக் குறிப்பிட்டார்.


தான் திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நயன்தாராவின் 'யாரடி நீ மோகினி' திரைப்படம் வெளியானபோது இணையவழி நுழைவுச்சீட்டு வசதி இல்லாததால் 23 நண்பர்களுடன் அடித்துப் பிடித்து திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்ததாக நினைவு கூர்ந்தார்.


அன்று நயன்தாரா படத்தை கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்த தான், இன்று அவருடனே இணைந்து நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும், இது தனது கனவுப் பட்டியலையும் தாண்டிய ஒரு அரிய வாய்ப்பு என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


 #sooriyannews #Srilanka #TruthAtAllCosts #india #NewsUpdate